சிரியா நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக, அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். சிரியாவின் அலெப்போ நகரைச் சேர்ந்த நுஜீன் என்ற இளம்பெண், தனது சகோதரியுடன் ஜெர்மனிக்கு அகதியாக சென்றார்.
நுஜீன் பெருமூளை பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரால் நடக்க முடியாமல் போனது. மெஸ்ஸியின் தீவிர ரசிகையான நுஜீன் மெஸ்ஸியை வாழ்க்கையில் ஒருமுறையாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நுஜீனின் இந்த நிலையை அறிந்த பார்சிலோனா அணி நிர்வாகம், நுஜீன் மெஸ்ஸியின் பார்சிலோனா அணி பங்கேற்கும் ஆட்டத்தை நேரில் காண ஏற்பாடு செய்தது.
அதன்படி, டிசம்பர் 2 ஆம் தேதி பார்சிலோனா செல்டா அணிகள் மோதிய போட்டியைக் கண்டுகளித்தார்.
கால்பந்து விளையாட்டின் மன்னனாக கருதப்படும் மெஸ்ஸியை நேரில் சந்தித்தது பற்றி விவரித்த நுஜீன்,”கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மெஸ்ஸியின் ஆட்டத்தைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அவரின் முகம் குழந்தையைப் போல் உள்ளது.
அவரின் கூச்ச சுபாவம் இன்னும் மாறவில்லை. 30 வயதிலும் அவர் இளம் வீரரைப் போல் உள்ளார். அவரைச் சந்தித்ததன் மூலம் என் கனவு நனவானது.” என்று தெரிவித்தார்.
Mobile AppDownload Get Updated News