நேற்று நடந்த குழு மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பில் 72 கிலோ பிரிவில் விளையாடிய கிரண், 68 கிலோ பிரிவில் திவியா காக்ரன், 65 கிலோ பிரிவில் ரிது மாலிக் தங்க பதக்கங்களை வென்று அசத்தினர்.
அதே போல் 76 கிலோ பிரிவில் பூஜா, 59 கிலோ பிரிவில் ரவிடா வெள்ளி பதக்கத்தை வென்றனர்.
மறுமுனையில் கவிதா (76 கிலோ), மானு தோமர் 59 கிலோ பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்றனர்.
இன்று ஃப்ரி ஸ்டைல் மல்யுத்த போட்டிகள் நடைப்பெற உள்ளன. இதில் இந்திய வீரர்கள் 10 பிரிவுகளில் விளையாட உள்ளனர்.
2017 காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஸ் போட்டியில் இந்திய அணி சார்பில் மொத்தம் 60 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Mobile AppDownload Get Updated News