யோகாசனத்தில் அமெரிக்கப் பெண் செய்த சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த ஹர்ஷ நிவேதா என்ற மாணவி முறியடித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்சிதம்பர நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி ஹர்ஷ நிவேதா, உத்தித பத்மாசனத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் 90 வினாடிகளில் உத்தித பத்மாசனம் செய்து புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், 170 விநாடிகளில் உத்தித பத்மாசனம் செய்த அமெரிக்கப் பெண்ணின் சாதனையை மாணவி முறியடித்துள்ளார்.
மாணவி ஹர்ஷ நிவேதா யோகசனத்தில் ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News