இதுபற்றி தெரிவித்த அவர், தனது வலது காலின் முட்டியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக தொடர்ந்து வலி இருந்து வருவதாகவும், மருத்துவர் அறிவுரைப்படி இரண்டு மாதங்கள் ஓய்விற்கு பின்பும் வலி குறையாததால் அடுத்தக்கட்டடமாக, அறுவை சிகிச்சை அல்லது ஊசி மூலம் குணப்படுத்தும் முறைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், அடுத்து வர இருக்கும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதற்கு பின் நடக்கும் போட்டிகள் குறித்து சில மாதங்களுக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் சானியா மிர்சா- மார்டீனா ஹிங்கீஸ் ஜோடி இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News