Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

மிகச்சிறந்த கால்பந்து கிளப்பான ரியல் மெட்ரிட்டிலிருந்து விலக ரொனால்டோ ஆசை!

$
0
0

கால்பந்து உலகில் மிகப்பெரிய கிளப்பான ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் அணியிலிருந்து நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ விலக வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.

கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழ்பவர் கிரிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் தேசிய அணியைச் சேர்ந்த இவர், உலகின் சிறந்த கிளப்பான ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

தற்போது நடந்த கிளப் உலகக்கோப்பை இறுதிபோட்டியில் கிரிமியோ அணிக்கு எதிராக கோல் அடித்து ரியல் மெட்ரிட் அணிக்கு கோப்பையைக் கைப்பற்றி தந்தார். மேலும், தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்நிலையில், ரொனால்டோவிடம் ரியல் மெட்ரிட் அணியிலிருந்து விலகுவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரொனால்டோ,”அணியிலிருந்து விலக எனக்கு விருப்பம்தான்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசும்போது, “ மைதானத்தில் நடப்பது மட்டுமே எனது கட்டுப்பாட்டில் இருக்கும். மைதானத்துக்கு வெளியே, அணியில் இடம்பெறுவது என்னைத் தக்க வைத்துக் கொள்வது எல்லாம் அணியின் நிர்வாகிகள்தான் முடிவு செய்ய வேண்டும். அதை நான் முடிவு செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு ரியல் மெட்ரிட் அணி ரொனால்டோ உடனான ஒப்பந்தத்தை 2021 ஆம் ஆண்டு வரை நீட்டித்தது. இந்நிலையில், சமீபத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக ரொனால்டோ மீது தொடரப்பட்ட வழக்கில் ரியல் மெட்ரிட் அணி ரொனால்டோவுக்கு உறுதுணையாக இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், ரொனால்டோவுக்கும் ரியல் மெட்ரிட் அணிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


இளையராஜாவுடன் இணைந்த சுசி கணேசன்


நுழைவுத்தேர்வு


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


குட்கா, பான் மசாலா தடை செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பாராட்டு:



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>