#BREAKING Cristiano Ronaldo wins #UEFABestPlayer in Europe award #UPDATE Ronaldo wins #UEFABestPlayer in Europe award https://t.co/vO3CtOuSGi pic.twitter.com/obxTzzbOTe
யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியிலும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரிலும் கிரிஸ்டியானா ரொனால்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். யூரோ கோப்பையில் போர்ச்சுக்கல் அணிக்காகவும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மாண்ட்ரிட் அணிக்காகவும் அவர் விளையாடினார்.
இந்நிலையில், 2015-2016ஆம் ஆண்டுக்கான ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு கிரிஸ்டியானா ரொனால்டோவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 55 பத்திரிகையாளர்களைக் கொண்ட தேர்வுக்குழுவில் பிரான்சின் அந்துவான் கிரீசுமன், வேல்ஸின் கேரத் பேல் ஆகியோரின் பெயருடன் ரொனால்டினோவின் பெயரும் இறுதிக்கட்ட பரிந்துரையில் இடம்பெற்றது.
மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் கிரிஸ்டியானா ரொனால்டோ அந்துவான் மற்றும் கேரத் ஆகியோரை முந்தி ஐரோப்பியாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
கிரிஸ்டியானா ரொனால்டோ இந்த விருதை ஏற்கெனவே 2013-2014ஆம் ஆண்டில் வென்றுள்ளதால் இது அவர் பெறும் இரண்டாவது விருதாகும். ரொனால்டோ தவிர அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸியும் இந்த விருதை இரண்டு முறை பெற்றுள்ளது குறிப்படத்தக்கது.
Mobile AppDownload Get Updated News