ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். சிந்துவுக்கு வழங்கப்படும் அதிகபடியான வாழ்த்துக்கள் குறித்து பேஸ்புக்கில் சணல்குமார் சசிதரன் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 'சிந்துவை ஏன் இப்படி எல்லாரும் கொண்டாடுகிறார்கள்? அதில் கொண்டாட என்ன இருக்கிறது? சிந்துவின் சாதனையைப் பார்த்து நான் துப்பினால் என்ன?' என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்..
மலையாள இயக்குநரின் இந்த பதிவு குறித்து நெட்டிசங்கள் அவரை கடுமையாக சாடிவருகின்றனர்.சணல்குமார் இதுவரை இரண்டு படங்கள் இயக்கியிருக்கிறார். முதல்படம் ஓராள்பொக்கம் கேரள மாநில அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றது. சமீபத்தில் வெளியான ஒழிவுதிவசத்தகளி கேரள அரசின் சிறந்தப் படத்துக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News