இதனால் அவர் டைகர்ஸ் அணிக்கு எதிரான கிளப் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்க்கவில்லை. இது பேயர்ன் மியூனிக் அணிக்கு பெறும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் பேயர்ன் மியூனிக் அணியின் தடுப்பு ஆட்டக்காரரான பவார்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது இழப்பு பேயர்ன் அணிக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அணியின் முன்னணி வீரர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதித்திருப்பது அணியை பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த வாரத்தில் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஃபிராங்க்ஃபர்ட் அணியை எதிர்கொள்கிறது பேயர்ன் மியூனிக் அணி. ஃபிராங்க்ஃபர்ட் அணி கடந்த ஆறு ஆட்டங்களில் ஐந்து வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே பேயர்ன் மியூனிக் அணி தனது முன்னணி வீரர்கள் இல்லாமல் எதிர்கொள்வது அத்தனை சுலபமான ஒன்றாக இருக்காது. மேலும் அடுத்த வாரம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இவர் கலந்துகொள்வது சந்தேகம் தான். கடந்த 20 நாட்களில் நான்கு வீரர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் பேயர்ன் மியூனிக் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
Mobile AppDownload Get Updated News