Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

மான்செஸ்டர் சிட்டி அணி மீண்டும் வெற்றி: புள்ளி பட்டியலில் முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது எவர்டன்!

$
0
0

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணியும், ஏழாவது இடத்தில் இருக்கும் எவர்டன் அணியும் மோதின. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி நடக்கவிருந்த இந்த ஆட்டம் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

நடப்பு சீசனில் கவுன்டர் அட்டாக் முறையில் ஆட்டத்தை அணுகி சிறப்பாக செயல்பட்டு வரும் எவர்டன் அணி கடந்த சில ஆட்டங்களாக தடுப்பு ஆட்டத்தில் கோட்டைவிட்டு வருகிறது, இதனால் பல ஆட்டங்களில் தோல்வி அடைய நேரிட்டது. குறிப்பாக புள்ளிப் பட்டியலில் 18- ஆம் இடத்தில் இருக்கும் ஃபுல்ஹாம் அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் பரிதாபமாய் தோல்வி அடைந்தது, மேலும் புள்ளி பட்டியலில் 17வது இடத்தில் இருக்கும் நியூகாசில் அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. மறுமுனையில் மான்செஸ்டர் சிட்டி அணி கடந்த பதினாறு ஆட்டங்களாக வெற்றியை குவித்து வருகின்றது.எனவே இந்த ஆட்டத்தில் மிகத் தைரியமாக களமிறங்குவார்கள். எவர்டன் அணிக்கு மட்டுமல்ல எந்த ஒரு அணியாக இருந்தாலும் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமல்ல. எனவே இந்த ஆட்டம் கடும் எதிர்ப்புக்கு நடுவே துவங்கியது.

ஆட்டம் துவங்கி இரண்டாவது நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி அணியில் கான்செல்லோ ஒரு ஷாட் அடிக்க அதை எவர்டன் அணியின் கோல்கீப்பர் பிக்ஃபோர்ட் தட்டி விட்டார். ஆட்டத்தின் 17 வது நிமிடத்தில் மன்செஸ்டர் சிட்டி அணியின் ஜீசஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டார். ஆட்டத்தில் எவர்டன் அணி கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது. மான்செஸ்டர் சிட்டி அணி, தடுப்பு ஆட்டத்தை துளைத்து வாய்ப்புகளை ஏற்படுத்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இதனால் மான்செஸ்டர் சிட்டி அடி தொலைவில் இருந்து கோலை நோக்கி பந்தை செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இதை சரியாக புரிந்து கொண்ட மன்செஸ்டர் சிட்டி அணியில் இளம் நட்சத்திரமான ஃபோடன் ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் தனது வலது காலால் பந்தை சுழற்றி விட்டு கோலாக மாற்றினார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் மறுமுனையில் எவர்டன் அணியின் தடுப்பு ஆட்டக்காரரான டின்யே அடித்த ஷாட் கோல் கம்பத்தின் மேல் பட்டு அதன் அருகில் நின்று கொண்டிருந்த எவர்டன் அணியின் தாக்குதல் ஆட்டக்காரரான ரிச்சாலின் மேல்பட்டு கோலாக மாறியது, இதன் மூலம் அவர் நடப்பு சீசனில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் முதல்பாதி நிறைவுற்றது.

81089049

ஆட்டத்தின் இரண்டாம் பாதி துவங்கியதிலிருந்து மான்செஸ்டர் சிட்டி அணி முதல் பாதியை போலவே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மறுமுனையில் எவர்டன் அணியினர் முற்றிலுமாக தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆட்டத்தை எப்படியாகினும் டிரா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பங்குபெற்ற எவர்டன் அணியின் தடுப்பாட்டம் சிறப்பானதாக அமைந்தது. முதல் கோல் அடித்தது போலவே ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் மார்ரெஸ் பந்தை சுற்றிவிட்டு மான்செஸ்டர் சிட்டி அணியின் இரண்டாவது கோலை பதிவு செய்தார். முன்னிலை பெற்ற மான்செஸ்டர் சிட்டி அணி, ஆட்டத்தை மீண்டும் கவனமாக அணுகத் துவங்கினர். ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் மன்செஸ்டர் சிட்டி அணியின் பெர்நாடோ சில்வா மூன்றாவது கோவில் கழித்து மான்செஸ்டர் சிட்டி அணியை வெற்றி பெறச் செய்தார்.

மான்செஸ்டர் சிட்டி மணி சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் அவர்களின் எதிரணியினர் எந்த முறையை கையாள்வார்கள் என்று துல்லியமாக கணித்து அதற்கேற்றார்போல் மான்செஸ்டர் சிட்டி அணி ஆடுவது பார்ப்பவர்களின் கண்களில் கவர்ந்திழுக்கிறது. இறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி இரண்டாம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட 10 புள்ளிகள் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. மறுமுனையில் எவர்டன் அணியினர் தொடர்ந்து சொதப்பி வருவதால் ஏழாம் இடத்தில் நீடிக்கின்றனர்

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>