பெங்களூரு: ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்த சாய்னா நேவல் மீண்டும் களமிறங்கவுள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவலுக்கு வலது முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் சாய்னா ஆப்ரேஷன் செய்து கொண்டார்.
இதனால் போட்டிகளில் எதிலும் பங்கேற்காமல் இருந்த சாய்னா தற்போது மீண்டும் களமிறங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காயத்தால் எனக்கு எந்த நெருக்க்கடியுமில்லை. தற்போது முழுவதும் குணமடைந்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் பயிற்சியில் ஈடுபடலாம் என எனது உடற்பயிற்சியாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நாளுக்காகத்தான் இத்தனை நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன்.
இவ்வாறு சாய்னா நேவல் கூறினார்.

இதுகுறித்து சாய்னா நேவல் கூறியது:Swimming pic.twitter.com/pgdMMnLkFC
— Saina Nehwal (@NSaina) October 13, 2016
காயத்தால் எனக்கு எந்த நெருக்க்கடியுமில்லை. தற்போது முழுவதும் குணமடைந்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் பயிற்சியில் ஈடுபடலாம் என எனது உடற்பயிற்சியாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நாளுக்காகத்தான் இத்தனை நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன்.
இவ்வாறு சாய்னா நேவல் கூறினார்.
Mobile AppDownload Get Updated News