Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஐந்து நிமிடத்தில் மூன்று கோல்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது டோட்டன்ஹாம்!

$
0
0

இங்கிலாந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் எஃப்.ஏ கோப்பையின் நான்காவது சுற்றில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் வைகொம்பே அணியும், டோட்டன்ஹாம் அணியும் மோதின. இரண்டாம் நிலை லீக்கான சாம்பியன்ஷிப்பில் வைகொம்பே அணி கடைசி இடத்தில் இருக்கிறது. எனவே டோட்டன்ஹாம் அணியினருக்கு வெற்றி ஓரளவு எளிதாகவே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு நாட்களில் லிவர்பூல் அணியுடனான லீக் ஆட்டம் இருப்பதன் காரணமாக டோட்டன்ஹாம் அணியினர் தங்களது இரண்டாம் நிலை வீரர்களை களமிறக்கியது. முதல் பாதி இரு அணிகளும் நிதானமாகவே தொடங்கியது.

டோட்டன்ஹாம் அணியின் காரெத் பேல் ஆட்டத்தின் துவக்கத்திலேயே கோல் பதிவு செய்ய முனைப்பு காட்டினார், ஆனால் இரண்டு முறை அவர் அடித்த பந்து கோல் விழாமல் விலகிச் சென்றது. ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக வைகொம்பே அணிக்காக ஃப்ரெட் ஒரு கோல் அடிக்க வைகொம்பே அணி முன்னிலை பெற்றது. டோட்டன்ஹாம் அணியினர் எளிதாக வெற்றி பெறுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் வைகொம்பே அணியினர் ஒரு கோல் அடித்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
80466260

80453395

டோட்டன்ஹாம் அணியின் பேல் தொடர்ச்சியாக கோலை நோக்கி பந்தை அடித்த வண்ணம் இருக்க ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் அவருக்கு ஒரு கோல் கிடைத்தது. டோட்டன்ஹாம் அணியின் லூகாஸ் கொடுத்த கிராசை சிறப்பான முறையில் கோலாக மாற்றினார். முன்னிலையுடன் முதல் பாதியை முடிக்க வேண்டும் என்று எண்ணிய வைகொம்பே அணியினருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. 1-1 என்ற கோல் கணக்கில் முதல் பாதி முடிவடைந்தது. இரண்டாம் பாதி துவங்கியதிலிருந்து ஆதிக்கம் செலுத்தியது டோட்டன்ஹாம் அணி.

வைகொம்பே அணியினர் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டு கவுண்டர் அட்டாக் மூலம் கோல் அடிக்கலாம் என்று எண்ணி கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் டோட்டன்ஹாம் அணியின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக வைகொம்பே அணியினரால் ஒரு கவுண்டர் அட்டாக் கூட செய்ய முடியவில்லை. ஆட்டத்தில் கடுமையான ஆதிக்கம் செலுத்தியும் டோட்டன்ஹாம் அணியினரால் கோல் எதுவும் பதிவு செய்ய இயலவில்லை. இதனால் முதல்நிலை ஆட்டக்காரர்களான கேன், சன், என்டொம்பெலே, ஹோல்பேர்க் ஆகியோரை களமிறங்கினார் அணியின் மேலாளர் மோரினோ.
80466264

80465378

இருப்பினும் அவர்களால் சீக்கிரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் விங்ஸ் ஒரு கோல் அடிக்க டோட்டன்ஹாம் அணி முன்னிலை பெற்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் என்டொம்பெலே ஒரு கோல் அடிக்க 3-1 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணி முன்னிலை பெற்றது. சற்றும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளாத என்டொம்பெலே 90-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து 4-1 இன்று கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் டோட்டன்ஹாம் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது, அடுத்த சுற்றில் எவர்டன் அணியுடன் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>