Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

வெளியேறியது ஆர்சனல்: ஆறு ஆட்டத்துக்கு பின் முதல் தோல்வி!

$
0
0

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் எஃப். ஏ கோப்பையின் நான்காம் சுற்றில் நடப்பு சாம்பியனான ஆர்சனல் அணியும் சௌதம்ப்டன் அணியும் மோதின. தொடர்ச்சியாக ஆறு ஆட்டங்களில் தோல்வியை தழுவாத ஆர்சனல் அணி, 5 வெற்றி மற்றும் ஒரு டிரா என சிறப்பான ஓட்டத்தில் இருந்தது. மறுமுனையில் சௌதம்ப்டன் அணியினர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக லிவர்பூல் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது பலரது கவனத்தை ஈர்த்தது. ஆட்டங்களில் முதல் கோல் அடித்துவிட்டு, அதன்பின் கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டு, அவ்வப்போது கவுண்டர் அட்டாக் செய்து எதிரிகளை வீழ்த்துவது சௌதம்ப்டனின் வழக்கம்.

அதைப்போலவே இந்த ஆட்டத்திலும் துவக்கத்தில் சௌதம்ப்டன் அணியினர் தாக்குதலில் ஈடுபட்டனர், இருப்பினும் தடுப்பு ஆட்டத்தில் கவனமாகவே இருந்தனர். சௌதம்ப்டன் அணியின் வார்ட் பிரவுஸ் கார்னரில் இருந்து நேரடியாக கோலடிக்க எடுத்த முயற்சியை சரியாக கணித ஆர்சனல் அணியின் கோல் கீப்பர் லெனோ இறுதி நேரத்தில் கோல் விழாமல் தடுத்தார். அதைத்தொடர்ந்து ஆடம்ஸ் அடித்த பந்தை மீண்டும் தடுக்க ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் நீடித்தது.

80419782

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் சௌதம்ப்டன் அணியின் வாக்கர் பீட்டர்ஸ் கொடுத்த கிராஸ்ஸை ஆர்சனல் அணியின் தடுப்பு ஆட்டக்காரர் காப்ரியல் ஓன் கோல் அடித்து சௌதம்ப்டன் அணியை ஒரு கோல் முன்னிலை பெறச் செய்தார். சௌதம்ப்டன் அணி எதிர்பார்த்த ஒரு கோல் முன்னிலை அவர்களுக்கு கிடைத்த உடன் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்சனல் அணி செய்த தாக்குதல்களை சிறப்பான முறையில் தடுத்து அதை கவுண்டர் அட்டாக் செய்தனர் சௌதம்ப்டன் அணியினர்.
80429564

முதல் பாதியில் இதன் பின் பெரிய அளவில் இரு அணிகளும் வாய்ப்பு ஏற்படுத்தாத காரணத்தால் 1-0 என்ற கோல் கணக்கில் முடிவு பெற்றது. இரண்டாம் பாதி துவங்கியதிலிருந்து ஆர்சனல் அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது, அதை எதிர்பார்த்து காத்திருந்த சௌதம்ப்டன் அணியின் தடுப்பு ஆட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆர்சனல் அணியின் தாக்குதல்களை செயலிழக்கச் செய்தனர். இரண்டாம் பாதியில் சௌதம்ப்டன் அணியினர் கவுண்டர் அட்டாக் செய்யாத வண்ணம் ஆர்சனல் அணியின் தடுப்பு ஆட்டம் மிக சிறப்பாக அமைந்தது.

80425223

ஆர்சனல் அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக செயல்பட்டதால் அவர்களது தாக்குதல் ஆட்டம் கோல் அடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது, ஆனாலும் சௌதம்ப்டன் அணியின் தடுப்பு ஆட்டத்தை மீறி பெரிய அளவில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியாமல் தவித்தனர். குறிப்பாக ஆர்சனல் அணியின் ஸ்ட்ரைக்கரான என்கேத்தியா கிடைத்த வாய்ப்புகளை நழுவவிட ஆட்டத்தை சௌதம்ப்டன் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சென்ற ஆண்டு கோப்பையை வென்ற ஆர்சனல் அணி இந்த ஆண்டு நான்காம் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>