Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஃபார்முலா ஒன் பந்தயத்திற்கு திரும்பும் ஜென்சன் பட்டன்!

$
0
0

ஃபார்முலா ஒன் பந்தயத்தில் 2000ஆம் ஆண்டில் தனது முதல் பந்தயத்தில் வில்லியம்ஸ் அணியினருக்காக ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸில் ஜென்சன் பட்டன் போட்டியிட்டார். இதன்மூலம் பிரிட்டனிலிருந்து ஃபார்முலா ஒன் பந்தயத்தில் கலந்து கொண்ட இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். பிரான் அணிக்காக 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். அடுத்த ஆண்டிலேயே இவர் மெக்லாரென் அணியில் இணைந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

பிரான் அணியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென அணி மாறியது எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. 2011ஆம் ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், இரண்டாவது இடத்தை பெற்றார். செபாஸ்டியன் வெட்டல் ஆதிக்கம் செலுத்திய அந்த காலங்களில் இரண்டாம் இடம் பெறுவது பெரிதாகவே பார்க்கப்பட்டது.

80422142

2013ஆம் ஆண்டிலிருந்து மெக்லாரென் அணியின் வீழ்ச்சி துவங்கியது. அதைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வரை மெர்சிடிஸ் என்ஜினை பயன்படுத்திய மெக்லாரென் அணி, 2015ஆம் ஆண்டிலிருந்து ஹோண்டா என்ஜின் பயன்படுத்த தொடங்கியது. அது அணியை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றது. 2015ஆம் ஆண்டு 16வது இடம் பிடித்த இவர் 2016ஆம் ஆண்டு 15வது இடம் பெற்றார்.
80422440

2017ஆம் ஆண்டு ஒரே ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்ற நிலையில் தனது ஓய்வை அறிவித்தார். இதைத்தொடர்ந்து சூப்பர் ஜிடி கார் பந்தயத்தில் போட்டியிட்ட ஜென்சன் பட்டன், தற்போது வில்லியம்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், '19 வயது சிறுவனான எனக்கு வில்லியம்ஸ் அணி கொடுத்த வாய்ப்பை மறக்க முடியாது.

80420059

இந்த பாரம்பரியமிக்க அணியை மீண்டும் முதலிடத்திற்கு எடுத்துச் செல்ல என்னுடைய பங்கை நான் செய்வேன்' என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்ற ஆண்டு ஒரு புள்ளியும் பெறாத வில்லியம்ஸ் அணிக்கு ஜென்சன் பட்டன் நிச்சயம் பெறும் பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>