Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

டோட்டன்ஹாம் அணிக்கு விளையாட நேரிட்டால்? மெசுட் ஓசில் பரபரப்பு பதில்!

$
0
0

ஆர்செனல் அணியின் நட்சத்திர வீரர் மெசுட் ஓசில் அவ்வப்போது #AskMesut என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவார். அதுபோல இன்று அதிகாலையில் #AskMesut என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு மனம் திறந்தார் ஓசில். அப்பொழுது ஒரு ரசிகர் 'ஆர்செனலுடனான ஒப்பந்தம் முடிந்தபின் டோட்டன்ஹாமிற்கு விளையாட நேரிட்டால் என்ன செய்வீர்கள்' என்று கேட்க, அதற்கு ஓசில் 'சுலபமான கேள்வி. ஓய்வு பெற்றுவிடுவேன்' என்று கூறினார். ஆர்செனல் மற்றும் டோட்டன்ஹாம் ஆகிய இரு அணிகளும் லண்டனின் மேற்கு பகுதியை சேர்ந்தது.

இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டிகளில் எப்பொழுதும் அனல் பறக்கும். இரு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் ஏற்படும். ஆர்செனலுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இவர் இப்படி கூறியது ரசிகர்களை நெகிழச் செய்தது. துருக்கி நாட்டை சேர்ந்த பெனர்பாசே அணிக்கு ஒப்பந்தம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ரசிகர் 'பெனர்பாசே உங்களுக்கு ஏன் பிடிக்கும்' என்று கேள்வி எழுப்பினார்.

80228572

அதற்கு 'துருக்கியை பூர்வீகமாக கொண்ட ஜெர்மானியர்கள் ஒரு துருக்கி நாட்டை சேர்ந்த அணியின் மீது பற்றுதலாய் இருப்பார்கள். அதுபோல தான் நான் பெனர்பாசே மீது பற்றுதலாய் உள்ளேன்' என்று கூறினார். இது இவர் பெனர்பாசே செல்வார் என்ற விமர்சனங்களுக்கு மேலும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது.
80230971

'அடுத்ததாக எங்கு விளையாடுவீர்கள்' என்ற கேள்விக்கு அமெரிக்கா கொடி மற்றும் துருக்கி நாட்டு கொடியை விடையாக கூறி அதுவும் துருக்கி நாட்டிற்கு சென்றால் அது பெனர்பாசேயாக தான் இருக்கும் என்று கூறினார். இதுவும் அந்த விமர்சனத்திற்கு பதிலாக அமைந்தது. ஓசிலின் அடுத்த அணி என்ன என்பது விரைவில் தெரியவரும்.

80229513

ஆர்செனல் அணியில் ஓசிலுக்கு பதிலாக விளையாடும் எமிலி ஸ்மித் ரோ -வை பற்றிய கேள்விக்கு, 'கடந்த இரு ஆட்டங்களில் அவர் தாக்குதல் நடுகள வீரராக (No.10/Attacking midfielder) விளையாடி, இன்றும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்' என்று கூறினார். ஓசில் விட்டுச் செல்லும் இடத்தை ஸ்மித் ரோ பூர்த்தி செய்வார் என்று அவரே கூறியுள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


படம் இயக்குவது என் நோக்கம் அல்ல - சிவகார்த்திகேயன்


நுழைவுத்தேர்வு


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சேரி பிகேவியர்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>