இந்தியாவின் பெங்களூவைச்சேர்ந்த இஷான் பண்டித்தா. சில ஆண்டுகளுக்கு முன் கால்பந்து அரங்கில் சர்வதேச அளவில், சாதிக்க ஐரோப்பாவிற்கு சென்றார். அதற்கு தற்போது அவருக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
ஸ்பெயினில் நடக்கும் உள்ளூர் கால்பந்து தொடரான லா லிகா கால்பந்து தொடரில் பங்கேற்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் தற்போது 19 வயதுக்கு உட்படோருக்கான அணியில் முதலில் பங்கேற்பார். பின் மெயின் அணியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஷான் பண்டித்தா கூறியது:
இதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். ஆனால் இது வெறும் ஆரம்பம் தான், இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Mobile AppDownload Get Updated News