வுஹான்: வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா முன்னேறினார்.
சீனாவில் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ருமேனியாவின் சிமோனா ஹெலேப்பை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் கிவிட்டோவாவின் கையே ஓங்கியிருந்தது. இதன் முதல் செட்டை 6-1 என கிவிட்டோவா சுலபமாக வென்றார். பின் இரண்டாவது செட்டையும் 6-2 என கிவிட்டோவா எளிதாக கைப்பற்றினார்.
முடிவில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ருமேனியாவின் சிமோனா ஹெலேப்பை 6-1, 6-2 என வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தார்.
Mobile AppDownload Get Updated News