ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் கடந்த 6ஆம் தேதி பிர்மிங்ஹாம் நகரில் தொடங்கியது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதிச் சுற்றுப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜப்பான் வீரர் கென்டோ மொமோடாவை எதிர்கொண்ட கிடாம்பி, தடுமாற்றத்துடனே ஆட்டத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து தனது ஆதிக்கத்தை வலுப்படித்திய ஜப்பான் வீரர் கென்டோ முதல் செட்டை 21-12 என தனதாக்கினார். பின், இரண்டாவது செட்டையும் அதிரடியாக விளையாடி 21-16 என தனக்கே சொந்தமாக்கிக்கொண்டார்.
இதனால், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-16 என நேர் செட்களில் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறுகிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும் காலிறுதியில் தைவான் வீராங்கனை டாய் ட்சூ யிங்-டம் யிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் கடந்த 6ஆம் தேதி பிர்மிங்ஹாம் நகரில் தொடங்கியது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதிச் சுற்றுப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜப்பான் வீரர் கென்டோ மொமோடாவை எதிர்கொண்ட கிடாம்பி, தடுமாற்றத்துடனே ஆட்டத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து தனது ஆதிக்கத்தை வலுப்படித்திய ஜப்பான் வீரர் கென்டோ முதல் செட்டை 21-12 என தனதாக்கினார். பின், இரண்டாவது செட்டையும் அதிரடியாக விளையாடி 21-16 என தனக்கே சொந்தமாக்கிக்கொண்டார்.
.@srikidambi's sublime run at the @YonexAllEngland 2019 comes to an end; puts everything in his tank forcing the … https://t.co/R4XVybUeuc
— BAI Media (@BAI_Media) 1552068512000
A fearless warrior on the court, @NSaina put everything in her tank but unfortunately her @YonexAllEngland 2019 cam… https://t.co/1cpEIDkNOD
— BAI Media (@BAI_Media) 1552044920000
Mobile AppDownload Get Updated News