Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

புரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடரை தொடங்குமா தமிழ் தலைவாஸ்?

$
0
0

புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் இந்தியன் பிரீமியா் கிரிக்கெட் தொடருக்கு ரசிகா்கள் நல்ல வரவேற்ப வழங்கியதைத் தொடா்ந்து கபடியையும் பிரபலப்படுத்தும் நோக்கில் புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு வீரா்களை கொண்ட 12 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்கின்றன. இத்தொடரின் 6வது சீசன் இன்று சென்னையில் தொடங்குகிறது.

12 அணிகளும் இரண்டு குழுக்கலாக பிரிக்கப்பட்டுள்ளன. “எ” பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலா்ஸ், மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பாா்ச்சூன் ஜெயன்ட்ஸ், ஜெய்பூா் பிங்க் பேந்தா்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதே போன்று “பி” பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, பாட்னா பைரேட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியா்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.


இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அடுத்ததாக எதிா் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒருமுறை மோதவேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தமாக 22 லீக் ஆட்டத்தில் விளையாடும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதனைத் தொடா்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 2வது லீக் சுற்றில் புனேரி பால்டன் – மும்பை அணிகள் மோதுகின்றன.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>