பல்பீர் சிங் 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்திச் சென்றவர். சுதந்திர இந்தியாவின் கொடியை முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் ஏந்தியச் சென்ற பெருமைக்கு உரியவர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய அணியில் மூன்று மூறை இடம்பெற்றவர். 1948ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக அறிமுகமான அவர், இறுதிப்போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணி தங்கம் வெல்ல முக்கியப் பங்காற்றினார்.
தற்போது 94 வயதான பல்பீர் சிங் மூச்சுக்குழாய் நிமோனியா நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது பேரன் கபீர் தெரிவித்திருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Mobile AppDownload Get Updated News