ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஹாக்கியில் கஜகஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 21-0 என்ற கோல் கணக்கில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதல் கடைசி வரை ஆதிக்கம் செலுத்தி கோல் வேட்டை நடத்திய இந்திய வீராங்கனைகள் 21 கோல்களைப் போட்டனர். பதிலுக்கு ஒரு கோல்கூட கஜகஸ்தான் அணியால் அடிக்க முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 21-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே இந்திய அணி தனது முதல் போட்டியில் இந்தோனேஷியாவுக்கு எதிரான முதல் போட்டியை 8-0 என வென்றுள்ளது.
Mobile AppDownload Get Updated News