#History has been created! #India has won a medal in Sepak Takraw for the 1st time in the Asian Games! The team pro… https://t.co/glLPQcUAjM
ஒலிம்பிக், காமென்வெல்த் போன்ற போட்டிகளுக்கு பிறகு உலகளவில் விளையாட்டு திருவிழாக கொண்டாடப்படும் நிகழ்வு ஆசிய விளையாட்டுப் போட்டிகள். இது 1951ம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகின்றனர்.
செபக்டக்ராவ் போட்டியில் வெண்கலம் :
செபக்டக்ராவ் பெயரே வித்தியாசமாக தோன்றுகிறதா... ஆம் இந்த போடி வாலி பால் போன்று தான் விளையாடப் படுகின்றது. ஆனால் வாலிபால் போன்று கைகளால் பந்தை அடிப்பது அள்ள. முழுக்க முழுக்க கால்பந்து போன்று கால்களை வைத்து தான் பந்தை ஒரு புறத்திலிருந்து, மறுமுனைக்கு அடிக்கும் விளையாட்டாக செபக்டக்ராவ் உள்ளது.
ஆசிய போட்டியில் முதன் முறையாக இந்திய அணி செபக்டக்ராவ் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது.
லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 0-2 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தாலும், அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு இந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ஆசிய போட்டி ஆண்களுக்கான செபக்டக்ராவ் போட்டியில் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியதால் வெண்கல பதக்கம் உறுதி செய்துள்ளது.
நாளை இந்த செபக்டக்ராவ் போட்டியின் இறுதிப் போட்டி தாய்லாந்து - மலேசியா அணிகளுக்கிடையே நடைப்பெற உள்ளது.
Mobile AppDownload Get Updated News