ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 68 கிலோ எடைப்பிரிவு ப்ரீ ஸ்டைல் மல்யுத்தம் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த திவ்யா கக்ரன் பங்குபெற்றார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று சீனாவின் தைபெய் சென் வென்லிங்கை எதிர்கொண்ட அவர், 10 – 0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றார்.
Mobile AppDownload Get Updated News