ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நட்சத்திர வீரர் ஜீனடின் ஜிதேன், பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி, ரியல் மெட்ரிட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளார்.
உலகின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றாக இருப்பது ரியல் மெட்ரிட் அணி. ரொனால்டோ, கேரத் பேல், செர்ஜியோ ரமோஸ், பென்சிமா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நிரம்பிய இந்த அணிக்கு, முன்னாள் பிரான்ஸ் அணி கேப்டனும் முன்னாள் ரியல் மெட்ரிட் அணி வீரருமான ஜீனடின் ஜிதேன் பயிற்சியளித்து வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக அவரது பயிற்சி காலத்தில், ரியல் மெட்ரிட் அணி யுஇஎப்ஏ சாம்பியன் லீக் கோப்பையை மூன்று முறையும், பீபா கிளப் உலகக் கோப்பையை இரண்டு முறையும், யுஇஎப்ஏ சூப்பர் கோப்பையை இரண்டு முறையும் லா லீகா கோப்பையை ஒரு முறையும், சூப்பர் கோப்பா கோப்பையை ஒரு முறையும் வென்றது.
இந்நிலையில், ரியல் மெட்ரிட் அணி சாம்பியன் கோப்பையை வென்று ஒரு வாரம் கூட கழியாத நிலையில், ஜிதேன் இன்று செய்தியாளர் சந்திப்பில் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகப் போடவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் முடிவு, ரியல் மெட்ரிட் ரசிகர்களை மட்டுமில்லாமல், கால்பந்து ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

CONFIRMED: Zidane leaves Real Madrid after winning the #UCL three years running https://t.co/cUakusNcDf
— UEFA Champions League (@ChampionsLeague) 1527765257000
The last 2.5 years will forever be ingrained in @realmadriden's history : #LaLiga: Champions League: Club Wo… https://t.co/g0eOfdG3Sj
— LaLiga (@LaLigaEN) 1527768491000
கடந்த 3 ஆண்டுகளாக அவரது பயிற்சி காலத்தில், ரியல் மெட்ரிட் அணி யுஇஎப்ஏ சாம்பியன் லீக் கோப்பையை மூன்று முறையும், பீபா கிளப் உலகக் கோப்பையை இரண்டு முறையும், யுஇஎப்ஏ சூப்பர் கோப்பையை இரண்டு முறையும் லா லீகா கோப்பையை ஒரு முறையும், சூப்பர் கோப்பா கோப்பையை ஒரு முறையும் வென்றது.
Zidane as Madrid coach (2016-18) UEFA Champions League UEFA Super Cup Club World Cup Spanish Super… https://t.co/G3OUek9bgE
— UEFA Champions League (@ChampionsLeague) 1527765457000
இந்நிலையில், ரியல் மெட்ரிட் அணி சாம்பியன் கோப்பையை வென்று ஒரு வாரம் கூட கழியாத நிலையில், ஜிதேன் இன்று செய்தியாளர் சந்திப்பில் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகப் போடவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் முடிவு, ரியல் மெட்ரிட் ரசிகர்களை மட்டுமில்லாமல், கால்பந்து ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Mobile AppDownload Get Updated News