காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார்.
அண்மையில் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு மகளிர் பளுதூக்கும் போட்டியில், 53 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு.
இந்நிலையில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய அவர் சர்வதேச பழு தூக்குதல் கூட்டமைப்பின் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார்.
இதனால் அவர் பெற்ற தங்கப்பதக்கம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, 2017 மற்றும் 2014ஆம் ஆண்டுகளிலும் காமன்வெத் போட்டியில் தங்கம் வென்றிருக்கார் சஞ்சிதா சானு.
Mobile AppDownload Get Updated News