சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இந்தியப் பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு, தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசளித்துள்ளார்.
இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், கடந்த சில வாரங்களுக்கு முன், ஆண்களுக்கான பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அதன்பின், மீண்டும் சரிந்தார்.
இதனிடையே, தேர்வுக்குழுவில் உறுப்பினரும், கிடாம் பி ஸ்ரீகாந்தின் குடும்ப நண்பருமான எம்எஸ்கே பிரசாத்திடம், கிடாம்பி ஸ்ரீகாந்த் தோனியிடம் இருந்து பரிசு ஒன்றை வாங்கித்தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தரநிலையில், முதலிடம் பிடித்தால் வாங்கித் தருவதாக எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.
Thank you @msdhoni for the wonderful gift and can’t tell how happy I am. This just made my day. #MSDhoni… https://t.co/AK2EKJAoFW
— Kidambi Srikanth (@srikidambi) 1526797772000
இந்நிலையில் கிடாம்பி ஸ்ரீகாந்த், தோனி கையெழுத்திட்ட பேட்டை புகைப்படம் எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Mobile AppDownload Get Updated News