Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஐ.எஸ்.எல். கால்பந்து; இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி!

$
0
0

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சென்னையின் எப்.சி அணி, கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்தன.

இதனையடுத்து ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. புனே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டாவது லெக் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.



இந்நிலையில், சென்னை, கோவா இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், 2-வது லெக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 17ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் இறுதி போட்டியில், பெங்களூரு எப்.சி - சென்னை எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்