Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களுருவை வீழ்த்தியது சென்னை அணி!

$
0
0

பெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி பெங்களுரு அணியிஅ 2-1 என வீழ்த்தியது.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியை தொடர்ந்து அதே பாணியில் 10 அணிகள் மோதும் 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் பெங்களுருவில் நடந்த 26-வது லீக் போட்டியில் சென்னை அணி, பெங்களுரு அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 7-வது நிமிடத்தில் சென்னையின் ஜேஜே முதல் கோல் அடித்தார். பின் 85-வது நிமிடம் பெங்களுருவின் சுனில் சேத்ரி கோல் அடிக்க, போட்டி 1-1 என சமனானது.

தொடர்ந்து 88-வது நிமிடத்தில் சென்னை அணியின் தனபால் கணேஷ் ஒரு கோல் அடித்தார். இறுதியில் 2-1 என்ற கோல்கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது.


Chennaiyin FC Beats Bengaluru FC 2-1 in league match in Bangalore

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>