டொரணன்டோவில் நடக்கும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின்ன் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக் இணை, அமெரிக்காவின் ராஜீவ் ராம் மற்றும் தென்னாப்ரிக்காவின் ரேவன் கிளாசன் இணையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்சின் ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் மற்றும் நிக்கோலஸ் மகுட் இணைக்கு எதிராக களமிறங்கியது போபண்ணா - டோடிக் இணை. இப்போட்டியில், கடுமையாகப் போராடிய போபண்ணா இணை முதல் செட்டை 4-6 என இழந்தது. பின்னர் சுதாரித்து ஆடி 6-3 என இரண்டாவது செட்டை வசப்படுத்தியது. அடுத்து நடந்த டை பிரேக்கர் செட்டில் 6-10 என தோல்வியடைந்து ஏமாற்றியது.
இதனால், 4-6, 6-3, 6-10 என்ற செட்களில் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
Mobile AppDownload Get Updated News