பார்சிலோனா கிளப் அணிக்காக நெய்மர்(25) விளையாடி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்சி. இவர்களின் திறமையான ஆட்டத்தால், எதிரணியினர் திணறினர். இருவரும் இணைந்து விளையாடியதை ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இந்நிலையில் பி.எஸ்.ஜி அணிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு நெய்மர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதற்காக நெய்மருக்கு வழங்கப்படும் தொகை ரூ.1666 கோடி. இதனால் பார்சிலோனா அணியில் இருந்து நெய்மர் விலகுகிறார். இதையடுத்து பிரியா விடை கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை நெய்மர் வெளியிட்டுள்ளார். அதில், சிறுவயதில் தான் வீடியோ கேமில் விளையாடிய ஜாம்பவான்களுடன் நிஜத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. பார்சிலோனா அணியில் விளையாடியது மிகவும் சவாலான ஒன்று.
புதிய சவால்களை சந்திக்க புதிய அணிக்கு செல்வதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி குறித்து தெரிவிக்கையில், எப்போதும் சிறந்த நண்பராக இருப்பவர். அவருடன் விளையாடியது மிகவும் பெருமையானது. வாழ்நாளில் மெஸ்ஸியைப் போல் சிறந்தவரைக் கண்டதில்லை என்று கூறியுள்ளார்.
Neymer praised Messi in Farewell time.
Mobile AppDownload Get Updated News