Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

புதிய சாதனை படைத்து கிராண்ட்சிலாம் கிங்க் ஆனார் ரோஜர் பெடரர்

$
0
0

கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்று கிராண்ட்சிலாம் கிங்க் ஆகியுள்ளார் சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரர்.

நேற்று விம்பிள்டன் டென்னிஸ் ரவுண்ட் 32ல் ஜெர்மனியின் மிஸ்சா ஜிவர்வ் என்ற வீரருக்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் பெடரர் 7-6,6-4,6-4 என்ற நேர்செட் கணக்கில் அசத்தலாக வெற்றி பெற்று ரவுண்ட் 16 சுற்றுக்குள் நுழைந்தார். பெடரர் பெற்ற இந்த வெற்றி கிராண்ட்சிலாம் போட்டிகளின் கிங்க் ஆக ஆகியுள்ளார்.

இதுவரை 316 வெற்றிகளுடன் இந்த பட்டியிலில் செரினா வில்லியம்ஸுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். தற்போது பெடரர் பெற்ற இந்த வெற்றியின் மூலம் 317 வெற்றியுடன் முதலிடத்தில் கெத்தாக முன்னேறியுள்ளார். அதே போல விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை 7 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் செரினா வில்லியம் அனைத்து வகை டென்னிஸ் தொடரின் வெற்றியை கணக்கிட்டால் அவர் தான் அதிக வெற்றியை பெற்ற வீரர் என்ற பெருமையை இன்னும் தக்க வைத்துள்ளார்.

அதிக கிராண்ட்சிலாம் வெற்றி பெற்ற வீரர்கள்:



பெடரர் - 317
செரினா வில்லியம்ஸ் - 316
மர்லினா நவ்ரதிலோவா - 306
கிறிஸ் எவர்ட் - 293

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>