பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சிங் என்ற 25 வயது இளைஞர் பேஸ்கெட் பால் விளையாட்டில் பந்தை சுழற்றுவதை கொஞ்சம் வித்தியாசமாக செய்ய நினைத்துள்ளார்.
வாயால் பந்தை சுற்றுவது அவருடைய ஐடியா. அதுவும் வாயில் ஒரு டூத் ப்ரஷை செங்குத்தாக வைத்துக்கொண்டு அதன் மேல் பந்தை சுழல விடுவது அவருடைய திட்டம். இதற்காக பயிற்சி எடுத்து வந்த அவர் புதன்கிழமை தனது கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அதில் அவர், பேஸ்கெட் பால் விளையாட்டில் பயன்படுத்தும் பந்தை திட்டமிட்டபடி வாயில் வைத்து சுழற்றினார்.
53 நொடிகள் பந்து அவர் வாயில் இருந்த ப்ரஷ் மீது சுழன்றது. இதன் மூலம் அவர் ஏற்கெனவே இதே போல 6.84 பந்தை சுழற்றிய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News