Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இந்திய ஒலிம்பிக் பணிக்குழுவின் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிப்பு!

$
0
0

டெல்லி : இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பணிக்குழுவானது 2020-இல் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் குறித்த பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது.

அடுத்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்கு மற்றும் ஆயத்தம் குறித்து ஆராய இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தற்போது 2020 டோக்கியோ ஒலிம்பிக் குறித்த முதல்கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. கடைசியாக சமர்பிக்கப்பட உள்ள அறிக்கையின் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

இந்தியாவில் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த சிறப்பு குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது நிதி குறித்தும் மற்றும் உலகத்தரத்திலான பயிற்சிகள் வழங்குதல் குறித்தும் ஆராய்ந்து தங்களின் பரிந்துரை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த பணி அவ்வளவு சுலபம் இல்லை என்றும், ஆனாலும் நாம் கடினமாக உழைத்து பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்று ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றவரும், இந்த பணிக்குழுவில் அங்கம் வகிக்கும் அபினவ் பிந்த்ரா கூறியுள்ளார்.

பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் இது குறித்து கூறும் போது, முதலில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான பரிந்துரையை சமர்பிக்கிறோம் என்றாலும், நீண்ட காலத்தை கருத்தில் கொண்டு பரிந்துரைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உதாரணமாக நீண்ட கால தடகள திட்டத்தை வரையறுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவரும் இந்தக்குழுவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் பணிக்குழுவானது பல முறை கலந்து ஆலோசித்து தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள், வெளிநாட்டு விளையாட்டு வல்லுநர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி அறிக்கையை தயார் செய்துவருகின்றனர். அபினவ் பிந்த்ரா, கோபிசந்த் இல்லாமல், ஹாக்கி பயிற்சியாளர் பால்தேவ் சிங், விளையாட்டு விஞ்ஞானி ஜிஎல் கண்ணா, ஹாக்கி முன்னாள் கேப்டன் விரென் ரஸ்கியுன்ஹா, பத்திரிகையாளர் ராஜேஷ் கல்ரா, கல்வியாளர் ஓம் பதக் மற்றும் குஜராத் மாநில விளையாட்டுத்துறையை சேர்ந்த சந்தீப் பிரதான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் :

1. குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் ஒலிம்பிக் மட்டுமல்லாது பாராலிம்பிக்கையும் சேரும். அறிக்கையின் பெயர் “2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகள் தயாரிப்பு” என்று தான் பெயரிடப்பட்டுள்ளது.

2. எல்லா முன்னெடுப்புகளுக்கும் அதிகார வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி நிதியை பார்த்துக்கொள்ளும் இந்த குழுவானது டோக்கியோ 2020 ஒலிம்பிக் தயாரிப்புகளுக்கு முழு பொறுப்பு உடையது.

3. இந்த குழுவில் சேர்ந்து பணிபுரிய சர்வதேச இயக்குநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. தற்போது பணியில் இருக்கும் பயிற்சியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களை நீக்கிவிட்டு, முன்னாள் தடகள வீரர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

5. பிரதம மந்திரி கோல்டு கார்டு எல்லா தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விநியோகிக்கப்படும். இதனை கொண்டு விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கலாம்.

6. தடகளத்திற்கு தேவையான பொருட்களில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய அதிகார வழிநடத்தும் குழுவில் புது பிரிவு ஏற்படுத்தப்படும்.

7. எல்லா விளையாட்டு வீரர்களும் மருந்து, உணவு, போதை மருந்து குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

8. தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முதன்மை தன்மையை தவறாமல் எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>