Congratulations to R Vaishali for winning the gold medal at Asian Blitz Championship. We are proud of her accomplishment: PM @narendramodi
ஆசிய பிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சென்னை சேர்ந்த வீராங்கனை வைஷாலி பங்கேற்றார்.
இப்போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றுவந்த அவர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவின் யுக்ஸின் சாங்கை வென்ற அவர் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.
வைஷாலியின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வைஷாலியின் சாதனையால் இந்தியாவுக்கே பெருமை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mobile AppDownload Get Updated News