பதக்க வேட்டை
நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளில், இந்திய சார்பில் மூன்று(3) தங்கம் உட்பட 6விருதுகளை கைப்பற்றிருந்தது. மகளிருக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடை பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெறும் முதல் தங்கம் பதக்கம் இதுவாகும். தொடர்ந்து நடந்த ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் வீரர் ஜெரமி லால்ரினுங்கா இந்தியா சார்பில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தொடர்ந்து இந்தியாவின் அச்சிந்தா ஷூலி சிறப்பாக விளையாடி அவர் மொத்தம் 313 கிலோ தூக்கி இந்தியா சார்பில் மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
பளுதூக்குதல் பிரிவில் சிறப்பாக விளையாடியுள்ள இந்திய வீரர்கள், மொத்தமாக இந்திய அணி தரப்பில் '3தங்கம் 2வெள்ளி 1வெண்கல பதக்கம்' உட்பட 6 பதக்கங்கள் கைப்பற்றியுள்ள இந்திய அணி காமன்வெல்த் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நேற்று நடந்த போட்டியிலும் இந்தியா சார்பில் மூன்று பதக்ககங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது . இதன் மூலம் 9 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி, பல போட்டிகளில் இறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளது.
மீண்டும் வெளிப்பதக்கம்
நேற்று நடந்த மகளிர் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான ஜூடோ இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் மைக்கேலா வொயிட்பூய்-ஐ இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் எதிர்கொண்டடு, தோல்வியடைந்த சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 2014ம் ஆண்டு போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் ஜூடோ போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பதக்க பட்டியலில் முன்னேற்றம்
தொடர்ந்து ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவினருக்கான ஜூடோ போட்டியில், விஜய்குமார் யாதவ் சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றார்.மகளிர் 71 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீரர் ஹர்ஜிந்தர் கவுர் 212 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்ற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு 3தங்கம் 3வெள்ளி 3வெண்கலம் உட்பட 9 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 6 வைத்து இடத்தில் உள்ளது.
இறுதி சுற்றில் தவறிய பதக்கங்கள்
ஜூடோ ஆடவருக்கான 66 கிலோ எடைப்பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியாவின் நாதன் காட்ஸிடம் ஜஸ்லீன் சைனி தோல்வியடைந்து பதக்கத்தை தவற விட்டார். மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் மொரிஷியஸிக்கு எதிராக வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சுசிகா தாரியல் தோல்வியடைந்து அவரும் வெண்கல பதக்கத்தை தவற விட்டார்.
இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணிகள்
நேற்று நடந்த குத்துச்சண்டை போட்டியிலும் அமித் பங்கால், முகமது ஹுசாமுதீன் மற்றும் ஆஷிஷ் சவுத்ரி ஆகியோர் சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தையும் உறுதி செய்துள்ளனர்.
நேற்று நடந்த லான் பவுல்ஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி அடங்கிய, இந்திய பெண்கள் அணி 16-13 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டியில் நுழைந்து முதல் முறையாக பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
Mobile AppDownload Get Updated News