புதுடில்லி: இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல், காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியை துவங்கியுள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவலுக்கு வலது முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் சாய்னா ஆப்ரேஷன் செய்து கொண்டார்.
இதனால் போட்டிகளில் எதிலும் பங்கேற்காமல் இருந்த சாய்னா தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து மீண்டும் பயிற்சியை துவங்கியுள்ளார். இவர் அடுத்த மாதம் நடக்கவுள்ள, சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பார் என அவரது தந்தை ஹார்விர் சிங் தெரிவித்துள்ளார்.
இவர் சமீபத்தில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.ஏ.,) விளையாட்டு வீரர்களின் உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இதற்கான கூட்டம் வரும் நவம்பர் 6ல் நடக்கவுள்ளது. ஆனால் இவர் சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கவுள்ளதால் இந்த கூட்டத்தில் இவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mobile AppDownload Get Updated News