Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

மார்ச் மாதத்தில் சிறந்த வீரருக்கான பெயர்கள் பரிந்துரை: லின்கார்ட், கேன் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்!

$
0
0


இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் மாதம்தோறும் சிறந்த வீரர், சிறந்த மேலாளர், சிறந்த கோல் என பல்வேறு விருதுகள் வழங்கப்படும், இதை மக்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான வீரர்கள் மேலாளர்கள் மற்றும் கோல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற மான்செஸ்டர் சிட்டி அணியின் குன்டோகன் இம்முறை இடம்பெறவில்லை. மட்டுமல்லாமல் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறந்த வீரருக்கான விருதை பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் புருனோவும் இந்த மாதம் இடம்பெறவில்லை.

புதிய சீசனில் இதுவரை மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற எவரும் இம்முறை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 8 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியலில் 8 வீரர்களும் வெவ்வேறு அணியைச் சேர்ந்தவர்கள். பழைய மேலாளர் லாம்பார்டால் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படாத செல்சீ அணியின் தடுப்பு ஆட்டக்காரரான கிரிஸ்டன்சன் புதிய மேலாளரின் கீழ் மிக முக்கியமான ஒரு வீரராக உருவெடுத்துள்ளார் எனவே இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லெஸ்டர் அணியின் நட்சத்திர வீரர்களான பார்ன்ஸ், மேடிசன் ஆகியோர் காயம் காரணமாக விலகிய நிலையில் இகானாச்சோ லெஸ்டர் அணியில் மிக முக்கியமான வீரராக பொறுப்பேற்றுள்ளார். சென்ற மாதத்தில் ஆடிய மூன்று ஆட்டங்களில் 5 கோல் அடித்து அசத்திய அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாட நேரம் கொடுக்காத காரணத்தால் ஜனவரி மாதம் வெஸ்ட் ஹாம் அணியில் ஓர் ஆண்டு ஒப்பந்தமாகியிருக்கும் லின்கார்டின் அட்டகாசமான ஆட்டத்தால் அவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தடுப்பு ஆட்டக்காரர் லூக் ஷா, லீட்ஸ் அணியின் கோல் கீப்பர் மெய்லியர், மான்செஸ்டர் சிட்டி அணியின் மாரஸ், டோட்டன்ஹாம் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன், பிரைட்டன் அணியின் டிரோசார்ட் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

செல்சீ அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து ஒரு தோல்வி கூட கிடையாது டுக்கல், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் மேலாளர் ஓலே, பிரைட்டன் அணியின் மேலாளர் பாட்டர் மற்றும் லெஸ்டர் சிட்டி அணியின் மேலாளர் ராட்ஜர்ஸ் ஆகியோரின் பெயர்கள் சிறந்த மேலாளர் கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் premierleague.com என்ற வலைதள பக்கத்தில் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மேலாளராக வாக்கு செலுத்தலாம்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>