2009ஆம் ஆண்டு துவக்கப்பட்ட லைப்சிக் அணி இன்னும் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இம்முறை டி.எஃப்.பி பொக்கால் கோப்பையை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும்.
2019ஆம் ஆண்டு டி.எஃப்.பி பொக்கால் கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறி வந்த லைப்சிக் அணி பேயர்ன் மியூனிக் அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோப்பையை வென்ற பேயர்ன் மியூனிக் அணி இந்த ஆண்டு டி.எஃப்.பி பொக்கால் கோப்பையில் 2-வது சுற்றில் இரண்டாம்நிலை அணியான ஹோல்ஸ்டன் கீல் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியது.
அந்த சுற்றில் முன்னேறிய ஹோல்ஸ்டன் கீல் அணி அரையிறுதிப் போட்டியில் டார்ட்மன்ட் அணிக்கு எதிராக மோதுகிறது. 2017 ஆம் ஆண்டு டுக்கெல் மேலாளராக செயல்பட்டு டார்ட்மண்ட் அணியை டி.எஃப்.பி பொக்கால் கோப்பையை வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்சிக் அணி மற்றும் வெர்டெர் பிரெம்மென் அல்லது ரிகென்ஸ்பர்க் அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டி மே மாதம் ஒன்றாம் தேதி நடைபெறும் என்றும். ஹோல்ஸ்டன் கீல் மற்றும். டார்ட்மன்ட் அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
Mobile AppDownload Get Updated News