Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இன்டர் அணி வெற்றி: ஆறு புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது!

$
0
0

இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் சிரி அ கால்பந்து லீக்கில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இன்டர் அணியும் 19வது இடத்தில் இருக்கும் பர்மா அணியும் மோதின. இது இரண்டு அணிகள் மோதிய முதல் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏசி மிலான் அணி கடந்த ஆட்டத்தை டிரா செய்ததன் காரணமாக இன்டர் அணி 3 புள்ளிகள் நிலையோடு முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த ஆட்டத்தை இன்டர் அணி வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏசி மிலான் அணியை விட ஆறு புள்ளிகள் முன்னிலை பெற்று புள்ளிப் பட்டியலில் வலுவான நிலையை எட்ட முடியும். எனவே இந்த ஆட்டத்தை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இன்டர் அணி களம் இறங்கியது.

ஆட்டம் துவங்கியதிலிருந்து இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இன்டர் அணி குறிப்பாக முற்றிலுமாக தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தி வந்தனர், மறுமுனையில் பர்மா அணியும் தொடர்ந்து வாய்ப்புகளை ஏற்படுத்தி வந்தனர். ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பர்மா அணியின் ஹர்னானி ஏற்படுத்திய அருமையான வாய்ப்பை கர்ட்டிச் தலையால் முட்டி கோல் பக்கம் திருப்பி விட அதை இன்டர் அணியின் கோல்கீப்பர் ஹன்டனோவிச் எளிதாக பிடித்தார். முதல் பாதியின் கடைசி பதினைந்து நிமிடத்தில் இன்டர் அணி முற்றிலுமாக ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் ஹக்கிமி கொடுத்த கிராஸ்சை எரிக்சன் நிச்சயம் கோல் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதைத் தவற விட்டார். தொடர்ந்து தாக்குதல் நடத்திய இன்டர் அணிக்கு ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் 2 அருமையான வாய்ப்புகள் கிடைத்தன. முதல் வாய்ப்பை ஸ்கிரினியர் அடிக்க அதை பர்மா அணியின் கோல் கீப்பர் செப்பெ தட்டிவிட பந்து இன்டர் அணியின் பெரிசிச் கால்களுக்கு செல்ல அதை அவர் கோலாக மாற்ற முற்பட பர்மா அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் அந்த கோல் விழாமல் பார்த்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்டர் அணியின் ஸ்ட்ரைக்கர் லுக்காக்கு ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் ஒரு வாய்ப்பையும் ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் மற்றொரு வாய்ப்பையும் நழுவவிட்டார். முதல் பாதி கோல் இன்றி 0-0 என முடிந்தது.

இரண்டாம் பாதியை அருமையாக தொடங்கிய இன்டர் அணிக்கு ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் லுக்காக்கு கொடுத்த பாசை சான்ச்செஸ் கோலாக மாற்ற இன்டர் அணி முன்னிலை பெற்றது. ஆட்டத்தை சமன் செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் பர்மா அணி தாக்குதல் நடத்த ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் இன்டர் அணி கவுண்டர் அட்டாக் செய்தது. லுக்காக்கு மற்றும் சான்ச்செஸ் கவுண்டர் அட்டாக்கை முன்னெடுத்துச் சென்றனர்.

81353040

இறுதியில் லூக்காக்கு கொடுத்த அருமையான பாசை சான்ச்செஸ் கோலாக மாற்ற இன்டர் அணி 2 கோல் முன்னிலை பெற்றது. இன்டர் அணியினர் ஏற்படுத்திய பல அருமையான வாய்ப்புகளுக்கு இறுதியாக பலன் கிடைத்தது. பர்மா அணியினர் உடனடியாக திருப்பி அடித்தனர். ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் பசெல்லா கொடுத்த கிராஸ்சை ஹெர்னானி கோலாக மாற்ற பர்மா அணி இன்டர் அணிக்கு அழுத்தம் கொடுத்தது. இதனால் இன்டர் அணி கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடத் தொடங்கியது. பர்மா அணியால் இன்டர் அணியின் தடுப்பு ஆட்டத்தை மீறி வாய்ப்புகளை ஏற்படுத்த முடியாமல் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இன்டர் அணி இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏசி மிலான் அணியை விட 6 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>