Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

அரையிறுதிக்கு முன்னேறியது நார்த் ஈஸ்ட்: கேரளா அணிக்கு பத்தாவது இடம்!

$
0
0

இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் 107 வது ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் நார்த் ஈஸ்ட் அணியும் 10வது இடத்தில் இருக்கும் கேரளா அணியும் மோதின. இவ்விரு அணிகள் மோதிய முதல் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. இரு அணிகளுக்கும் லீக் போட்டியின் இறுதி ஆட்டமாக அமைந்த இந்த ஆட்டத்தில் கேரளா அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியல் 9வது இடத்திற்கு முன்னேறும். அதுபோல நார்த் ஈஸ்ட் அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். எனவே இந்த ஆட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் நார்த் ஈஸ்ட் அணி களம் இறங்கியது.

புதிய மேலாளர் நியமிக்கப்பட்டு ஆடிய 8 ஆட்டங்களில் ஐந்து வெற்றியை பதிவு செய்து நார்த் ஈஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, மறுமுனையில் கேரளாவில் தொடர்ந்து சொதப்பி வருகின்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது நார்த் ஈஸ்ட் அணிக்கு அத்தனை கடினமான ஒன்றாக இருக்காது. நார்த் ஈஸ்ட் அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கியிருப்பது ஆட்டத்தின் துவக்கத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஆட்டம் துவங்கிய முதல் நிமிடத்தில் மச்சாடோ கொடுத்த பாசை ஃபாக்ஸ் தவறவிட்டார்.

81233519
81245492

தொடர்ந்து தாக்குதல் நடத்திய நார்த் ஈஸ்ட் அணிக்கு 4வது நிமிடத்தில் இம்ரான் கான் அடித்த பந்து கோலை விட்டு விலகிச் சென்றது. தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட நார்த் ஈஸ்ட் அணியின் தடுப்பு ஆட்டமும் சிறப்பாக செயல்பட்டது. தாக்குதல் ஆட்டத்திற்கு பேர் போன கேரளா அணியின் தாக்குதல்களை எந்த ஒரு தவறும் இன்றி செயலிழக்கச் செய்தனர். ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் கேரளா அணியின் கோனேவிற்கு கிடைத்த அருமையான வாய்ப்பை தவற விட்டார், நிச்சயமாக கோல் அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
81245495

கேரளா அணியின் சார்பாக முர்ரே மூன்று முறை கோலை நோக்கி பந்தை அடிக்க அதில் எதுவும் கோலாக மாறவில்லை. ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் சுஹைர் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து தாக்குதல் நடத்திய நார்த் ஈஸ்ட் அணிக்கு, ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் லெலெங்மாவியா வெகு தொலைவிலிருந்து ராக்கெட் வேகத்தில் கோல் அடித்து நார்த் ஈஸ்ட் அணியை 2 கோல் முன்னிலை பெறச் செய்தார். முதல் பாதியை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று முடித்தது நார்த் ஈஸ்ட் அணி.

81220737
81245497

இரண்டாம் பாதியில் கேரளா அணி சற்று தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடத் தொடங்கியது, மறுமுனையில் நார்த் ஈஸ்ட் அணி தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா அணியின் சார்பாக பிரவீன், ஜீக்சன் சிங், கோமஸ், முர்ரே என யார் அடித்த பந்தும் நார்த் ஈஸ்ட் அணியின் கோல்கீப்பரான சுபாசிஷ் ராய்யை சோதிக்க வில்லை. கேரளா அணி நடத்திய தாக்குதல்களில் விஷம் இல்லை. மறுமுனையில் நார்த் ஈஸ்ட் அணியினர் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். கிடைத்த நேரத்தில் எல்லாம் தாக்குதல் நடத்திய நார்த் ஈஸ்ட் அணிக்கு ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் பிரவுன் பந்தை ஓங்கி அடிக்க அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

81227036

அதைத் தவிர அணியின் மச்சாடோ, கள்ளேகோ, சுஹைர் ஆகியோர் அடித்த பந்துகள் தவறி சென்றன. ஆட்டத்தின் இறுதியில் நார்த் ஈஸ்ட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாமிடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியை பின்னுக்குத் தள்ளி நார்த் ஈஸ்ட் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது, மட்டுமில்லாமல் அரையிறுதி சுற்றில் தங்களுக்கென ஒரு இடம் பதிவு செய்துள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>