Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ரியல் மாட்ரிட் அணி வெற்றி: முதலிடத்தை நெருங்கும் ரியல்மாட்ரிட்

$
0
0

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லீகா போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியும் 19வது இடத்தில் இருக்கும் வல்லேடாய்ட் அணியும் மோதின. இவ்விரு அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கடந்த 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளை பதிவு செய்த ரியல்மாட்ரிட் அணியினர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கினர். முதலிடத்தில் இருக்கும் அட்லடிகோ மாட்ரிட் அணியை விட 6 புள்ளிகள் பின்தங்கியிருக்கும் ரியல் மாட்ரிட் அணியினர், இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இரு அணியினருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை 3 புள்ளிகளாக குறைத்துவிடலாம். மறுமுனையில் வல்லேடாய்ட் அணியினர் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த ஆறு ஆட்டங்களாக வெற்றி பெறாமல் தவித்து வருகின்றனர். ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தை அவர்கள் வெல்லும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் 19வது இடத்தில் இருந்து 14-வது இடத்திற்கு முன்னேறலாம், ரியல்மாட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டம் அத்தனை எளிதான இருக்காது என்றாலும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பரிசு பெரிதாக இருக்கும்.

ஆட்டத்தை சிறப்பாக துவங்கிய ரியல் மாட்ரிட் அணியினருக்கு ஆறாவது நிமிடத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சிறப்பான முறையில் தாக்குதலில் ஈடுபட்ட ரியல் மாட்ரிட் அணியை கவுன்டர் அட்டாக் செய்த வல்லேடாய்ட் அணியில் தாக்குதல் வீரர்களான ஜாங்கோ மற்றும் ஒரேலானா அடித்த பந்துகளை ரியல் மாட்ரிட் அணியின் கோல்கீப்பர் கோர்ட்டாய்ஸ் சிறப்பாக செயல்பட்டு கோலை தடுத்தார். முற்றிலும் தாக்குதல் ஆட்டத்தில் கவனம்செலுத்திய ரியல் மாட்ரிட் அணியில் இது விழிக்கச் செய்தது. எனது ஆட்டத்தில் சற்று நிதானம் காட்டினர்.

81136381

தாக்குதல் ஆட்டத்திலும் கவனம் செலுத்திவந்த ரியல் மாட்ரிட் அணியினருக்கு ஆட்டத்தின் 22 வது நிமிடத்தில் மரியானோ கோல் அடித்தார், அடித்த கோலை கொண்டாடுவதற்குள் ஆஃப் சைட் காரணமாக கோல் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து தாக்குதல் நடத்திய ரியல்மாட்ரிட் அணியின் மரியானோ ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார், துரதிஸ்டவசமாக மீண்டும் ஆஃப் சைட் காரணமாக நிராகரிக்கப்பட்டது. பத்து நிமிடங்களில் படித்த இரண்டு கோலும் நிராகரிக்கப்பட்டும் மனம் தளராது தாக்குதலில் ஈடுபட்ட ரியல் மாட்ரிட் அணியினருக்கு ஆட்டத்தின் 38 ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க அதை கசேமிரோ தவற விட்டார். இதனால் முதல் பாதியின் முடிவில் ஆட்டம் கோலின்றி 0-0 என முடிந்தது.

முதல் பாதியை விட்ட இடத்திலேயே பிடித்த ரியல் மாட்ரிட் அணியினர், முதல் பாதியை போலவே இரண்டாம் பாதியிலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்டனர். ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் குரூஸ் கொடுத்த கார்னரை கசேமிரோ மீண்டும் தலையால் முட்டி தவற விட்டார். இரண்டு அருமையான வாய்ப்புகளை தவற விட்ட கசேமிரோ ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் கோல் அடித்து ரியல் மாட்ரிட் அணியை முன்னிலை பெறச் செய்தார். முன்னிலை பெற்ற ரியல்மாட்ரிட் அணியினர் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

81135967

மறுமுனையில் வல்லேடாய்ட் அணியினர் ஆட்டத்தை சமன் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தாக்குதல் நடத்தினர். ஆனால் ரியல் மாட்ரிட் அணியின் தடுப்பு ஆட்டத்தை மீறி அவர்களால் வாய்ப்புகளை ஏற்படுத்த இயலவில்லை. ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் வல்லேடாய்ட் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது, ஆனால் மறு பரிசீலனை செய்யப்பட்டு பெனால்டி திரும்ப பெறப்பட்டது. ரியல் மாட்ரிட் அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பானதாக அமைந்ததால் 1-0 என்ற கோல் கணக்கில் செல் மாற்று அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் பி ரியல்மாட்ரிட் அணியினர் 24 ஆட்டங்களில் 52 புள்ளிகள் குறித்து இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். முதல் இடத்தில் இருக்கும் அட்லடிகோ அணி 55 புள்ளிகளுடன் முதல் இடத்தை வகிக்கின்றது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


எல்லாம் நாடக மேடை – பாடலாசிரியர் யார்?


அவதூறு + ஆபாசம் + சிபிஎம்


விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா – 2010


ஆசீர்வாத மந்திரங்கள்


‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18


பள்ளி ஆசிரியை இரும்பு ஸ்கேலால் அடித்ததில் 8ம் வகுப்பு மாணவன் பார்வை இழப்பு?...


Minority Report (2002) Tamil Dubbed Movie HD 720p Watch Online


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


தேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்


அண்ணியும் நானும் அடைந்த சுகம்.


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


நாராயண பட்டத்ரி


பாக்கியசாலிகளாக்கும் காமாட்ஷி அம்மன் நவாவரண பூஜை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>