Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பதினோறு ஆட்டங்களுக்கு பின் நியூ காசில் அணி வெற்றி!

$
0
0

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் தொடரில் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் எவர்டன் அணியும், 17வது இடத்தில் இருக்கும் நியூ காசில் அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் நியூ காசில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை அவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்காது. ஏனெனில் நியூ காசில் கடந்த ஆறு ஆட்டங்களில் தோல்வியை தழுவியுள்ளது மட்டுமல்லாமல், கடந்த 11 ஆட்டங்களாக வெற்றி இன்றி தவித்து வருகின்றனர். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் 16 வது இடத்திற்கு முன்னேறும். மட்டுமல்லாமல் சீசனின் முடிவில் இந்த வெற்றி மிக முக்கியமான ஒன்றாக அமையும்.

தொடர் தோல்விகள் காரணமாக ரசிகர்கள் நியூ காசில் அணியின் மேலான ஸ்டீவ் ப்ரூஸ்ஸிற்கு அழுத்தம் தந்து வருகின்றனர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறவில்லை என்றால் அவரது வேலை பறிபோகும் நிலை ஏற்படும். மறுமுனையில் எவர்டன் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்க ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும். இதனால் இரு அணிகளும் வெற்றியை நோக்கி நகரும். இரு அணிகளும் கவுண்டர் அட்டாக் முறையை கையாளுவதால் ஆட்டத்தில் வேகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பழைய எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் துவங்கிய ஆட்டத்தில் வேகம் சற்று குறைவாகவே இருந்தது.

80611841

80602980

எவர்டன் அணியின் சார்பாக கால்வேர்ட் லீவின் மற்றும் ரிச்சாலிஸ்ஸன் கோலை நோக்கி தொடர்ச்சியாக பந்தை அடித்துக் கொண்டே வந்தனர். ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் ரிச்சாலிஸ்ஸன் தனக்கு கிடைத்த வாய்ப்பை கோல் கீப்பர் கைகளுக்கு நேராக அடித்து தவறவிட்டார். அதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைக்க அது கோலிலிருந்து விலகிச் சென்றது. மறுமுனையில் வில்சன் தனக்கு கிடைத்த இரண்டு அருமையான வாய்ப்புகளை நழுவ விட்டார். இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதால் ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என்ற கோல் கணக்கில் முடிவு பெற்றது.

முதல் பாதியில் எவர்டன் அவர்களிடமிருந்து எதிர்பார்த்த அளவிற்கு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மறுமுனையில் நியூ காசில் அணி எதிர்பார்த்ததைவிட சற்று அதிகமாகவே ஆடினர். இரண்டாம் பாதியில் எவர்டன் அட்டகாசமாக துவங்கியது. 47 வது நிமிடத்தில் ரிச்சாலிஸ்ஸன், ராட்ரிகஸ் தொடர்ச்சியாக நியூகாசில் அணியின் தடுப்பு ஆட்டத்தை சோதித்தனர். எவர்டன் அணி இரண்டாம் பாதியின் துவக்கத்திலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில் ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் நியூ காசில் அணி திடீரென கவுண்டர் அட்டாக் செய்தது. பிரேசர் கொடுத்த கிராஸ்ஸை வில்சன் பெற்று அதை அடிக்க பந்து கோல் கம்பத்தில் இருந்து விலகிச் சென்றது.

80611846

ஆட்டத்தின் போக்கிற்கு நேர் எதிராக நடந்த இந்த கவுண்டர் அட்டாக் எவர்டன் அணியை கதிகலங்கச் செய்தது. இதனால் அதன் பின் எவர்டன் அணி தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது. ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் செல்வி அடித்த கார்னர் கிக்கை வில்சன் தலையால் முட்டி நியூ காசில் அணியை முன்னிலை பெறச் செய்தார். ஒரு கோல் முன்னிலை பெற்ற நியூ காசில் அணி கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது. இதனால் எவர்ட்ன் அணியினரால் பெரிய அளவில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த நியூகாசில் அணி,

80611455

கடைசி நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கிற்கு நேர்மாறாக ஒரு கவுண்டர் அட்டாக் செய்து மற்றொரு கோல் அடித்து 2-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூ காசில் அணி 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் பதினோறு ஆட்டங்களுக்கு பின் பெறக்கூடிய முதல் வெற்றியாக இது அமைந்தது. பலரின் எதிர்பார்ப்புகளை மீறி வெற்றி பெற்ற நியூ காசில் அணி இந்த வெற்றியை அடித்தளமாக வைத்து, இன்னும் பல வெற்றிகளை குவிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles