கடந்த ஆண்டு ரொனால்டோ சிறப்பாக செயல்பட்டு யுவெண்டஸ் அணிக்கு ஸ்கூடேட்டோ கோப்பை பிற உதவி செய்தார். தொடர்ந்து லேவான்டோஸ்கி பேயர்ன் மியூனிக் அணியை புண்டஸ்லிகா, டி.எப்.பி பொகால் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் லீக் கோப்பை என மூன்று கோப்பைகளை வெல்ல உதவி செய்தார். அதைத் தொடர்ந்து பி.எஸ்.ஜி அணி பிரெஞ்ச் லீக் 1 வெற்றி பெறுவதற்காக எம்பாப்பே பெரும் பங்காற்றினார்.
ஆனால் சென்ற ஆண்டு மெஸ்ஸி ஒரு கோப்பை கூட பார்சிலோனா அணிக்கு வென்று தராதது இதற்கு காரணம் என்று பலர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்தப் பட்டியல் சிறந்த வீரருக்கான பட்டியலே தவிர சிறந்த அணியில் இருக்கும் சிறந்த வீரருக்கான பட்டியல் இல்லை என்று மெஸ்ஸிக்கு ஆதரவாக பல குரல்கள் எழுகின்றன. கடந்த சீசனில் 30 கோலுக்கு மேல் பதிவு செய்த மெஸ்ஸி மேலும் 20 கோல்களுக்கு அசிஸ்ட் செய்திருந்தார்.
இது புதிய சாதனையாகும். எனவே இதைப் போன்ற சாதனைகளை ஈ.ஏ ஸ்போர்ட்ஸ் கௌரவிக்காதது தவறு என்று பலர் குற்றம்சாட்டுகின்றனர். மட்டுமல்லாமல் ஈ.ஏ ஸ்போர்ட்ஸ் ஆண்டுதோறும் வெளியிடும் வீடியோ கேம்மான ஃபிஃபாவின் கவர் ஸ்டாராக (Cover Star) எம்பாப்பே இருப்பதன் காரணமாகத் தான் அவர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.
மேலும் ஈ.ஏ ஸ்போர்ட்ஸ் ஃபிஃபாவிற்கு எதிரான வீடியோ கேம்மான புரோ இவோலூசியன் சாக்கரின் (PES) கவர் ஸ்டாராக மெஸ்ஸி இருக்கும் காரணத்தால் தான் அவர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஈ.ஏ ஸ்போர்ட்ஸிற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
Mobile AppDownload Get Updated News