பிரேசிலின் ரியோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினர். இதன்பின் இவருக்கு பரிசுகளும் பாராட்டுகளும் மழையாக பொலிந்த வண்ணம் உள்ளது.
சமீபத்தில் முன்னணி நிறுவனமான விசாக் ஸ்டீல் நிறுவனம் இவருடன் ஒப்பந்தமிட்டது. ஆனால் தற்போது இவருக்கு பேங்க் ஆப் பரோடா, ஜாக்பாட் டீலை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 3 ஆண்டுகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்த காலத்தில் சிந்து அணிந்து விளையாடும் டீ-சர்ட்டின் நடுவே பேங்க் பெயர் இடம் பெற்றிருக்க கிட்டத்தட்ட ரூ. 8 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் இந்த பேங்க், முன்னாள் இந்திய கேப்டன் டிராவிட்டை ஒப்பந்தம் செய்திருந்தது. இதன்பின் தற்போது சிந்துவை தேர்வு செய்துள்ளது. இது தவிர, சமீபகாலமாக சிந்துவுடன் சுமார் 8 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது. இதிலிருந்து அவருக்கு சுமார் ரூ. 50 கோடி வரை கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
Mobile AppDownload Get Updated News