ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஜெர்மனியின் கெர்பர் முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு, இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் கெர்பர், அமெரிக்காவின் லூசியாவை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெர்பர், முதல் செட்டை, 6-2 என வென்றார். இதற்கு இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றிய லூசியா பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் மிரட்டிய கெர்பர், 6-2 என மிகச்சுலபமாக தன்வசப்படுத்தினார்.
முடிவில்,ஜெர்மனியின் கெர்பர், அமெரிக்காவின் லூசியாவை 6-2, 3-6, 6-2 என்ற செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
Mobile AppDownload Get Updated News