தொலைக்காட்சிகளில் இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் முக்கியமான 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சம் காரணமாகக் கிரேக்க நாட்டில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த இரண்டு வாரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதற்கும், பள்ளிகள் இயங்குவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தீப அணி வகுப்பில் 340 குழந்தைகள் பங்குபெறவிருந்த நிலையில் அந்நிகழ்வு உட்பட அரங்கிற்குள் பொதுமக்கள் நுழைவதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
கொரோனா: இத்தாலியில் விளையாட்டு போட்டிகளுக்குத் தடை!
ஒலிம்பியா மாகாணத்தின் மேயர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ”கொரோனா வைரஸ் பரவி வரும் இச்சூழலில் ஒலிம்பிக் தீப அணிவகுப்பு நடத்துவது சரியான முடிவாக இருக்காது. மே மாதம் வரையில் அணி வகுப்பைத் தள்ளிப்போடுவது நல்லது” என்று குறிப்பிட்ட அவர், ”ஒரு சில பார்வையாளர்கள், குறிப்பிட்ட சில முக்கிய நபர்கள் மற்றும் அதிகாரிகளை வைத்து ஒலிம்பிக் தீப அணி வகுப்பை நடத்துவது இந்நிகழ்வின் மகத்துவத்தைக் குறைத்துவிடும். ஒலிம்பியா மாகாண சபையின் அனைத்து கட்சிகளும் மே மாதம் ஒலிம்பிக் அணி வகுப்புகளை நடத்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஆகையால், நீங்கள் எங்களது முடிவைப் பரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
கொரோனா கொடுக்கும் நெருக்கடி, டோக்யோ ஒலிம்பிக்ஸ் ரத்து..?
ஒலிம்பிக் போட்டியானது உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் காட்டும் தளமாக உள்ளது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டின் ஜூலை மாதம் டோக்கியோ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் போட்டிகள், குறித்த நாட்களில் நடைபெறுமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்ற குழப்பமான சூழல் இருக்கிறது.
Mobile AppDownload Get Updated News