“இப்போதைய நேரத்தில் டோக்கியோவில் நிலைமை கட்டுக்குள் உள்ளதா?, டோக்யோ செல்வதற்குச் சாத்தியமான சூழல் உள்ளதா?” என நிருபர் ஒருவர் டிக்கை நோக்கி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த டிக் “டோக்யோ 2020 என்பதை மையமாக வைத்து பல்வேறு விஷயங்கள் உள்ளது உணவு, பாதுகாப்பு, ஒலிம்பிக் கிராமம், ஹோட்டல்கள், ஊடகங்களுக்கான இடங்கள் என இது பெரிய வியாபாரம். விரைவில் நிலைமை சீராகும், அனைவரும் டோக்கியோவில் இருப்போம் என நம்புவோம்”என்றார்.
மேலும் டிக் பவுண்ட் கூறுகையில், “சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி யாரையும் இக்கட்டான சூழலில் நிறுத்தி விடாது. அனைத்து வீரர்களும் போட்டிகளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.
மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!!
இதற்கிடையே ஜப்பானில் இதுவரை 20க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஜப்பானில் கொரோனாவால் 4 பேர் உயிரிழந்து உள்ளதாக சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
கொரோனா எளிதாகப் பரவக் கூடிய தொற்று என்பதால் கொரோனா பாதிப்பு உள்ள நாட்டில் போட்டிகள் நடத்துவது சாத்தியமற்ற விஷயம் என்பது சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள், ஒரு வேளை காலதாமதமாக நடத்தப்படலாம் அல்லது வேறு நாட்டில் நடத்தப்படலாம் என்றும் கமிட்டியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உயிர்களைக் கொத்து கொத்தாகக் கொன்று குவித்து வரும் கொரோனா வைரசால் வர்த்தகம், உலக சுகாதாரம், விளையாட்டு என அனைத்து துறைகளும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதனிடையே இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சீனா நாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது என செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News