Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஷரபோவாவிற்கு இது தேவைதான் : முன்னாள் காதலன் காட்டம் !

$
0
0

லண்டன்: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரோபாவிற்கு இந்த தடை தேவைதான் என அவரது முன்னாள் காதலர் தெரிவித்துளார்.

ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரோபாவா. இவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக ,இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தான் தெரியாமல் அதை பயன்படுத்தியதாகவும், அதனால் தனது தண்டனையை குறைக்கும்படி, மேல்முறையீடு செய்திருந்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது ஷரபோவாவின் மீது உள்ள நியாங்கள் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை காலமான இரண்டு ஆண்டுகளுக்கு பதில், 15 மாதங்கள் தடையை குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது முன்னாள் காதலர் கிரிகோர் திமித்ரோவ் கூறுகையில்,’ஷரபோவா டென்னிஸை மிஸ் செய்யவில்லை. டென்னிஸ் தான் அவரை மிஸ் செய்கிறது. தற்போது போட்டிக்கு திரும்பும் ஷரபோவா, அதிக பசியுடன் இருப்பார். அதனால் அவரிடமிருந்து ஒரு ஆக்ரோஷமான ஆட்டத்தை நாம் எதிர்பாக்கமுடியும். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் தற்போது தவறுகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதனால் தவறு செய்தது யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அதனால் இது அவருக்கு தேவைதான். ’ என்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>