பெண்கள் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் தொடரில் இந்தியாவின் முன்னணி ஸ்ம்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, எட்டு முறைக்கு மேல் உலக ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற மலேசியாவின் நிகோல் டேவிட்டை முதல் சுற்றில் எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் அசத்திய ஜோஸ்னா, முதல் சுற்றில் இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். முதல் சுற்றில் 11-8 என கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்திய ஜோஸ்னா 11-6 என எளிதாக வென்றார்.
மூன்றாவது முறை:
இதன் மூலம் நிகோலை, ஜோஸ்னா மூன்றாவது முறையாக வீழ்த்தினார். கடைசியாக கடந்த 2018ல் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய போட்டிகளில் ஜோஸ்னா, நிகோலை வீழ்த்தினார். ஜோஸ்னா சின்னப்பா, அடுத்த சுற்றில் இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரியை எதிர்கொள்கிறார்.
Mobile AppDownload Get Updated News