பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் தாயகம் திரும்பிய மாரியப்பனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்து சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டிக்கு சென்ற அவருக்கு உறவினர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் படித்த பள்ளியில் அவர் பெயரில் தபால் தலை வெளியிடப்பட்டது. மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின் கீழ் சேலம் தபால்துறை சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.50 ஆயிரமும் மாரியப்பனுக்கு வழங்கப்பட்டது.
Mobile AppDownload Get Updated News