டென்னிஸ் தரவரிசையில் உலகின் நம்பர் 2 இடத்தில் உள்ள ரஃபேல் நடால், 14 வருடங்களாக காதலித்து வரும் பிரான் சிஸ்கா பெரேல்லோவை இந்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளார்.
நடால் டென்னிஸ் உலகில் வளர்ச்சி காண ஆரம்பித்தது முதல் சிஸ்கா பெரேல்லோ என்ற பெண்ணை காதலித்து வருகின்றார். அவர் சிஸ்கா பெரேல்லோ உடன் பல முறை டேட்டிங் சென்றது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ரஃபேல் நடால் மற்றும் சிஸ்கா பெரேல்லோவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ரோம் நகரில் நடந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களின் திருமணம் இந்தாண்டு நடைப்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டென்னிஸில் 17 கிராண்ட்சிலாம் பட்டங்கள் வென்று அசத்தியுள்ள நடால், அண்மையில் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் இறுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
Mobile AppDownload Get Updated News